எங்களது மீன் பண்ணையை நாங்கள் முதலில் ஆரம்பித்தோம் அப்போது மீன்கள் மட்டும் வளர்த்து வந்தோம் பிறகு 2007ல் இருந்து மீன் குஞ்சுகள் வளர்க்க ஆரம்பித்தோம்
தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் இருந்தும் மீன் குஞ்சுகள் வாங்க ஆரம்பித்தனர் எங்களிடம் உள்ள அனைத்து வகையான மீன் குஞ்சுகளும் தரமானதாக இருக்கும்
மீன்களை விட மீன் குஞ்சுகளை மிக கவனமுடன் பராமரிக்க வேண்டும் நாங்கள் எங்கள் குளங்களில் உள்ள மீன் குஞ்சுகளுக்கு தரமான உணவுகளை அளித்து வருகிறோம் அதனால் எங்களிடம் உள்ள மீன் குஞ்சுகள் தரமாக உள்ளது
குஞ்சுகள் உணவுகளை உட்கொள்கிறதா நல்ல சுறுசுறுப்புடன் இருக்கிறதா என்று தினமும் கவனிக்க வேண்டும் ஒரு குழந்தையை பராமரிப்பது போல் பராமரிக்க வேண்டும் அப்பொழுதுதான் தரமான மீன் குஞ்சுகளை பெற முடியும்
எங்களிடம் (fry size) சிறிய அளவு முதல் (stock size) பெரிய அளவு மீன் குஞ்சுகள் உள்ளது வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப நாங்கள் மீன் குஞ்சுகளை தருகிறோம் எங்களிடம் வாகன வசதி உள்ளது தேவைப்படுவோருக்கு டெலிவரி செய்து தருவோம்
சில பேர் சிறிய அளவு மீன் குஞ்சுகளை விட்டால் பழுதாகிவிடும் என்று நினைத்து கொண்டுள்ளனர் அது முற்றிலும் தவறு அப்படி கிடையாது சரியான பராமரிப்பு இருந்தால் இந்த நிலை ஏற்படாது
சொந்த குளத்தில் மீன் வளர்ப்பவர்கள் ஒரு ஏக்கருக்கு 3500 மீன் குஞ்சுகள் விடலாம் சரியான உணவு முறைகளை பின்பற்ற வேண்டும் நாம் எந்த வேலை செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் நாம் சரியான முறையில் பராமரித்து வந்தால் நல்ல லாபத்தை எடுக்க முடியும்
சரியான ஆழத்தில் குழிகள் வெட்ட வேண்டும் அப்போதுதான் சரியான அளவில் ஆக்ஸிஜன் கிடைக்கும் ஆக்சிஜன் சரியான அளவில் கிடைக்கவில்லை என்றாலும் குஞ்சுகள் பழுதாகும்
கம்மாய் பெரிய ஏரிகளில் மீன் குஞ்சுகள் வளர்ப்பவர்கள் ஒரு ஏக்கருக்கு 1500 முதல் 2000 வரை குஞ்சுகள் விட வேண்டும் பெரும்பாலும் உணவுகள் அளிக்கத் தேவையில்லை இயற்கை உணவுகளை சாப்பிடும் மீன் வகைகள் புல்கெண்டை, சீசீ, போன்றவற்றை வளர்த்தால் நல்ல லாபம் தரும்
மீன் குஞ்சுகளை வளர்க்க ஆரம்பிக்கும் பொழுது குளத்தில் குப்பைகள், அடர்ந்த புல் வகைகள், செடி, கொடிகள் இல்லாமல் பார்த்து கொள்ளவும் இல்லை என்றால் அதிக அளவில் குஞ்சுகள் பழுதாகிவிடும் குஞ்சுகளுக்கு நல்ல ஆக்சிஜன் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளவும்
சரியான முறையில் மீன் குஞ்சுகளை வளர்க்க ஆரம்பித்தாள் அதிகப்படியான லாபத்தை பெற முடியும் அது சிறிய அளவாக இருந்தாலும் சரி பெரிய அளவாக இருந்தாலும் சரி